மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு.!!

கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ராமலிங்க ஜோதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் .டிராவல்ஸ் நடத்தி வருகிறார்..இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 59 )இவர் நேற்று அங்குள்ள பியூட்டி பார்லருக்கு தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்றார்.. அங்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும்போதுஅந்த வழியாக வந்த ஒரு ஆசாமி கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்தான். அப்போது கிருஷ்ணவேணி பிடித்துக் கொண்டதால் 2 பவுன் செயின் மட்டும் கொள்ளையனிடம் சிக்கியது. செயினுடன்கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து கிருஷ்ணவேணி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.