கோவையில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!!

கோவை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 973பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 345 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 11 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.