மனைவி ஷாலினியுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற ‘தல’ அஜித் – செம வைரல்.!!

முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது.

அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ‘பிக் பாஸ்’ சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 62-வது படமான ‘விடாமுயற்சி’யை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் சைக்கிளிங் சென்றபோது எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.