மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுமூலம் வழங்கப்படும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிக்கவும், தகுதியான மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் அனைத்து மருந்து கடைகளிலும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதை கட்டாயமாக்க ஒன்றிய சுகாதார அமைச்சகம் திட்டம் வகுத்துள்ளது.இதற்காக மருந்துகள் விதிகள்,1945ல் திருத்தங்களைச் செய்ய அமைச்சகம் வரைவு அறிக்கையை செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிட்டது. இந்தத் திட்டம் தொடர்பாக ‘மருந்துகள் ஆலோசனைக் குழு’ முதலில் ஆலோசித்தது. பின்னர் ‘மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு’ உறுப்பினர்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, அக்குழுவும் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பரிந்துரை செய்துள்ளது.
மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்







