புவிசார் குறியீடு பதிவு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பழங்குடியினர் நல இயக்குநரகம் சார்பில், தமிழ்நாட்டின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களின் தனித்துவமான உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவை பெற, புவிசார் குறியீடு தொடர்பான விண்ணப்ப பதிவு செய்வதில் அனுபவம் பெற்ற ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து விருப்ப கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.விருப்பமுள்ள ஆலோசகர்கள் / நிறுவனங்கள், தங்களது தகுதி, திறன் மற்றும் அனுபவ விவரங்களுடன் உரிய நிதி மதிப்பீட்டை tntribalwelfare2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 25ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் அனுப்பலாம். தகவல்களுக்கு https://www.tntribalwelfare.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடவும். மேலும் பொன்வைத்தியநாதன் – 9489941941, சிவக்குமார் – 8489458489 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.