பெரியார் பிறந்தநாள்.. சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்ற முதல்வர்

தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று சமூகநீதி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

முதல்வர் விஜய் கடந்த வாரம் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த முதல்வர் விஜய், முதலீடு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார். நேற்று  முன்தினம் தான் அவர் சென்னை திரும்பியிருந்தார். இதற்கிடையே நேற்று பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், இது தொடர்பாக தலைமை செயலகத்தில் நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.உறுதிமொழி ஏற்கும் முன்பு முதலமைச்சர் விஜய் தலைமை செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு வந்த அவரை அமைச்சர் மரிய வில்சன், தந்தை பெரியார் புத்தகத்தை வழங்கி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் சமூகநீதி நாள் உறுதிமொழியை வாசித்தார். அதில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அன்பு நெறியையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பு நெறியையும் வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பதாக உறுதியேற்றார். மேலும் சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக ஒப்படைத்து கொள்வதாகவும், சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்பதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் உறுதிமொழியை வாசிக்க அமைச்சர்கள், துறை செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் அவரை தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு பிறகு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் ஆகியோருடன் முதலமைச்சர் விஜய் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் அரசு ஊழியர்களையும் பார்த்து பேசினார்.