குடும்ப அட்டைதார்களுக்கு சூப்பர் நியூஸ்… இனி பொது விநியோக திட்டத்தின் மூலம் சிறு தானியங்கள் சேர்க்கத் திட்டம் – அமைச்சர் அசத்தல் அறிவிப்பு.!!

தமிழக சட்டப்பேரவையில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்கவழக்கங்களை பாதுகாக்க வேண்டி இந்த கேழ்வரகு வழங்கும் திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் 50 கோடி ரூபாய் மதிப்பில் முழுமையாக கணினி மயமாக்கப்படும் என்றும் மாநில, மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்கள் மற்றும் எடை யாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அர. சக்கரபாணி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.