என்ன ஆச்சு இம்ரான் கான்னுக்கு .. நான் இந்தியாவை வணங்குகிறேன்…திடீரென அந்தர் பல்டி அடித்த பாகிஸ்தான் பிரதமர்… இது தான் காரணம்…

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது எனவும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே அந்நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீடு குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் இம்ரான் கான் அரசுக்கு போதிய பெரும்பான்மை பலம் இருப்பதால் அரசு வெற்றி பெறும் என கருதப்பட்டது. இந்தநிலையில் இம்ரான் கான் தற்போது சொந்த கட்சி எம்பிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜா ரியாஸ், நுார் ஆலம் கான் உள்ளிட்ட 22 எம்பிக்கள் பிரதமர் இம்ரான் கான் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.இந்தநிலையில் புதிய திருப்பமாக மார்ச் 22-23 தேதிகளில் நடைபெறும் ஓஐசி-எப்எம் மாநாட்டிற்குப் பிறகு ராணுவத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்ட நான்கு மூத்த பாகிஸ்தான் ராணுவ ஜெனரல்கள் பாகிஸ்தான் பிரதமரை ராஜினாமா செய்யுமாறு கூறியதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்ரான் கான் சார்பாக ராணுவத்துடன் மத்தியஸ்தம் செய்ய முயற்சி நடைபெறுகிறது.

இதற்காக முன்னாள் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்பை இம்ரான் கான் தரப்பினர் அனுப்பினர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் பலமுறை ராணுவத்தால் ஆட்சி கலைப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது எனவும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது என பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மலாக்கண்டில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய இம்ரான் கான், “மைன் ஆஜ் ஹிந்துஸ்தான் கோ தாத் தேதா ஹன் (நான் இன்று இந்தியாவுக்கு வணக்கம் செலுத்துகிறேன்) அது எப்போதும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பேணி வருகிறது” என்று கூறினார். “அமெரிக்காவுடன் குவாட் கூட்டணியில் இந்தியா உறுப்பினராக உள்ளது. ஆனால் அது நடுநிலையாக இருக்கிறது. பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ஏனென்றால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் மக்களுக்கானது,” என்று பாகிஸ்தான் இணையதளமான எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் கூறியுள்ளது.