மாணவர்களே! ஹேப்பி நியூஸ் இதோ!! இனி ஆன்லைனில் பொதுத்தேர்வு..?

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து விதிக்கப்படும் ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாக அனைத்து வகுப்புகளுக்கும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கடந்த வருடம் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதன்பின் கொரோனா 2-ம் அலையின் தாக்கம் குறைந்து மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆகவே நேரடி முறையில் வகுப்புகள் நடந்து வருவதால் நடப்பு கல்வி ஆண்டில் பொது தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. இதனிடையில் பல்வேறு மாநிலங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைம் வாயிலாக எழுதும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரி 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதன்பின் பள்ளிகள் திறந்த போதும் கொரோனா தொற்று அச்சத்தால் மாணவர்கள் பலர் பள்ளிக்கு வரவில்லை. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் தேர்வு அச்சத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளில் பரவத் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ஆன்லைன் வாயிலாக நடத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.