கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பதாக செட்டிபாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது .உடனே அந்த கடையில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகாதிப் ராய் (வயது 25 )என்பவரை கைது செய்தனர். இவர் சூலூர் தென்னம்பாளையத்தில் தங்கியிருந்து மலுமிச்சம்பட்டியில் பீடா கடை நடத்தி கஞ்சா சாக்லேட் விற்றதும் தெரிவந்தது .உடனே அவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த 195 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
Leave a Reply