மாணவர் மனசு பெட்டி இனி ஆன்லைனிலும் வரும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர் மனசு பெட்டி இனி ஆன்லைனிலும் வரும்- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 

கோவை அரசூர் பகுதியில் உள்ளகே .பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களுடன் அன்பில் என்ற தலைப்பில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே மனுக்களை படிப்பதோடு இல்லாமல் நேரடியாக சென்று கள ஆய்வு செய்வேன் என தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக அமைச்சராகவும் நேரடியாக ஒவ்வொரு மாவட்டமும் சென்று ஆசிரியர்களை சந்திக்கிறேன் என்றும்

ஒவ்வொரு பள்ளியின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகளை பெற்றோர்களும் ஆசிரியர்களும் எந்த குழைந்தைகளோடும் இணைத்து பேச வேண்டாம்.

குழந்தைகளின் தனி திறமையை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார். ஆசிரியர்களின் மனக்குமுறலை சரி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கட்டாயம் என்பதை நம்புகிறேன்.

ஆட்சிக்கு வந்த மூன்று மாத காலத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து பேசினேன்.

ஆசிரியர்களின் கோரிக்கையை உள்வாங்கியுள்ளேன்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக தீர்த்து வைக்க முடியும்.அதன் அடிப்படையில் அரசாங்கம் நடை போட்டு வருகிறது.

மருத்துவர்களை விட உயர்ந்தவர்கள் ஆசிரியர்கள் தான்.ஆசிரியர்கள் பெருமை குறியவர்கள் அவர்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கூறினார்.

ஆசிரியர் மனசு என்று பெட்டி வைக்கப்படும் எனவும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எனது அலுவலகங்களில் இந்த பெட்டி மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

மத்திய அரசின் திட்டங்கள் சுலபமாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனக்கு அறிவாற்றலை தந்த ஆசிரியர் பெருமக்கள் பக்கம் என்றைக்கும் இருப்பேன்.

பள்ளியில் அடி வாங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நானும் அடி வாங்கியுள்ளேன். வகுப்பில் தூங்கி ஆசிரியரிடம் திட்டுவாங்கியுள்ளேன்,

என கூட்டத்தில் ஆசிரியர் ஒருவரின் கேள்விக்கு நகைச்சுவையாக அமைச்சர் பதில் தெரிவித்தார். ஆட்டிசம் போன்ற பாதிப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு

வீட்டு வழி கல்வியை கொடுத்து வருகிறோம். இது போன்ற குழந்தைகளின் பெற்றோரை இறைவனாக பார்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சேவை செய்து வரும் 3000 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கல்வியாளர் சங்கமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களின் குறைகளை தெரிந்து கொள்ள டோல் ஃப்ரீ எண் அமைத்துள்ளோம். மாணவர் மனசு பெட்டி என்ற ஒரு அமைப்பும் உள்ளது.

இதில் வரும் தகவல்கள் முறையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் பள்ளிக்கல்வித்துறை மாணவர் மனசு போன்ற திட்டத்தை ஆன்லைன் முறையில் செயல்படுத்தும். மாணவர் மனசு பெட்டி மூலம் மாணவர்களின் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அரசாணை 101 திருத்தம் செய்யப்படுமா என்ற ஆசிரியர்களின் கோரிக்கை முதல்வரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது.

இதன் மூலம் ஆசிரியர்களின் பல பிரச்சனைகள் முடிவு பெறும். ஆசிரியர்கள் காத்திருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆசிரியர் பெட்டி அமைக்க வேண்டும் என்று முயற்சியில் உள்ளேன்.

அதற்கான தனி அலுவலகம் வைக்க உள்ளோம். எனது கேம்ப் அலுவலகத்திலும் பெட்டி வைக்கப்படும். மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். மாதமாதம் சிறுவர்களுக்கான திரைப்படம் பள்ளியில் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

மாற்றுத்திறனாளிகள் 12 வகையில் உள்ளனர்.

மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர். உடல் ரீதியாக பாதிக்கப் பட்டவர்களும் உள்ளனர். அவர்களுக்கு என்று தனியாக பாடத்திட்டம் அளவு.

மதிப்பெண் அடிப்படையில் வாழ்க்கை முடிந்து விட்டது என மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

மாணவர்கள் சென்சிடிவாக உள்ளனர். ஆகவே இந்த காலத்திற்கு தகுந்தது போல ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொண்டு பாடம் எடுக்கின்றனர் என தெரிவித்தார்.