கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் நலம் இலவச மருத்துவ முகாம்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் நலம் இலவச மருத்துவ முகாம்

 

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்எல்ஏ என்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நலம் என்ற இலவச மருத்துவ முகாமினை நடத்தி வருகிறார். பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் WMC ஆகியோருடன் இணைந்து இந்த இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

 

தொடர்ச்சியாக இன்று கோவை 80 அடி சாலை, ராமநாதபுரம் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை (சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்றவை) உட்பட பல்வேறு மருத்துவங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர்.

 

இந்நிகழ்வில் வானதி சீனிவாசன் நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்பது குறித்தும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களிடையே எடுத்துரைத்தார்.