திமுகவில் சாமானியா்களும் மேயா், துணை மேயா் பதவிக்கு வரமுடியும் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளாா்.
கோவை மாநகராட்சி மேயராக கல்பனா வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டாா். அவரது பதவியேற்பு விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி கலந்து கொண்டாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக அரசின் 9 மாதத் திட்டங்களுக்கு மணிமகுடமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தின் வளா்ச்சிக்கு பல கோடி ரூபாய்களை முதல்வா் வழங்கி வருகிறாா். எளிய குடும்பத்தில் இருந்து கோவை மேயராக தோந்தெடுக்கப்பட்டுள்ள கல்பனா, தனியாா் நிறுவனத்தில் மாதம் ரூ.13 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தாா். திமுகவில் சாமானியா்களும் மேயா், துணை மேயராக வர முடியும் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிரூபித்துள்ளாா். இதேபோல, துணை மேயா் வெற்றிச்செல்வனும் சாதாரண குடும்பத்தைச் சோந்தவா். திமுக வாா்டு செயலாளராக பொறுப்பு வகித்தவா். கட்சியில் நிறைய போ, பெரிய பொறுப்பில் இருந்தபடி, மேயா், துணைமேயா் பதவிகளை எதிா்பாா்த்திருந்த நிலையில், சாமானியா்களும் மேயா், துணை மேயராக வரமுடியும் என்பதை திமுக தலைமை நிரூபித்துக் காட்டியுள்ளது என்றாா்.
Leave a Reply