இந்தியாவில் முதன் முறையாக SSLV திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் SSLV D1 ராக்கெட்டை விண்ணில் ஏவியது.. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிடப்பட்ட இலக்கில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படவில்லை. இதனால் மேம்படுத்தப்பட்ட SSLV D2 ரக ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், SSLV ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று மாலை தொடங்கியது.
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீஹரிகோட்டா சதீதவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து SSLV-D2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்களுடன் மேம்படுத்தப்பட்ட SSLV-D2 ராக்கெட் விண்ணில் பாயந்தது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஒ.எஸ்.07, ஜானஸ்-1, ஆசாதி சாட்-2 உள்ளிட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் இன்று காலை 9.18 ஏவப்பட்டன.. இந்த செயற்கைக்கோள்களை பூமியில் இருந்து 356.2 கி.மீ உயரத்தில் புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன..
ராக்கெட் பயணம் வெற்றி அடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக SSLV திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது..
Leave a Reply