மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரக்கூடிய சிவராத்திரியை நாம் அனைவரும் மகா சிவராத்திரி என்று அழைக்கிறோம்.
அதன்படி பார்க்கும்போது இந்த வருடம் மகா சிவராத்திரியானது பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் அவர் மதுரைக்கு வந்து மதியம் 12 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதனை அடுத்து மதுரை விமான நிலைய சென்று அங்கிருந்து அவர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றார். அதன்பின் பிப்ரவரி 19ஆம் தேதி கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டு செல்கின்றார். இதனால் மதுரையிலும் கோவையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Leave a Reply