கோவை பெரியநாயக்கன்பாளையம் , கூடலூர் கவுண்டம்பாளையத்தில்உள்ள காமாட்சிபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் வனச்சரகர் சரவணன் தலைமையில் விரைந்து வந்த வனதுறையினர் காமாட்சிபுரத்தில் இருந்து புதுப்புதூர் செல்லும் வழியில் காட்டு யானையை வன பகுதியை நோக்கி விரட்டினார்கள்.அப்போது அங்குள்ள மேற்குத் தோட்டத்தில் வசித்து வந்த வேலுமணி (வயது 74 ) என்பவர் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.. அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரை கண்டு ஆவேசமடைந்து துதிக்கையால் தூக்கி வீசியது .மேலும் அவரை காலால் மிதித்து விட்டு வன பகுதிக்குள் சென்று விட்டது. இதனை கண்ட வனத் துறையின் அதிர்ச்சி அடைந்தனர்.அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
காட்டு யானை தாக்கி முதியவர் பரிதாப பலி..
