தமிழகம் முழுவதும் சுயஉதவி குழுக்களுக்கான சிறப்பு முகாம்..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் , தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுயஉதவி குழுக்களுக்கான சிறப்பு முகாம் களை இன்று தொடங்கி வைத்தார்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர் எஸ்.ஸ்ரீமதி.

சென்னை,மைலாப்பூரில் உள்ள AIOBEU, ஸ்வஸ்திகா சமூக நல மையத்தில் இவ்விழா நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்துடன் இணைந்து, இந்த முயற்சிகள் மூலம் நிதியறிவு மற்றும் சுயஉதவி குழுக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட ஆட்சியர் எம்.அருணா ஐ.ஏ.எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அதனையடுத்து , இத்திட்டத்தை தொடங்கி வைத்த
எஸ்.ஸ்ரீமதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது பேசிய அவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமிழ்நாட்டில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும், சுய உதவி குழுக்களுக்கான சிறப்பு முகாம்களை தொடங்கி இருக்கிறது. பொதுவாக சுய உதவி குழுக்கள் 1989 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. ஒரு குழுவிற்கு 8 முதல் 10 பெண்கள் வரை தங்களது பணத்தை சேமிப்பு கணக்கில் வைத்து பின்பு வங்கிகளின் மூலம் கடன் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம். மேலும், சென்னை-1 மற்றும் சென்னை-2 மண்டலங்களில் மட்டும் 97 பயனாளிகளுக்கு ரூ. 18.58 கோடியை குறைந்த வட்டி விகிதத்தில் கடனாக கொடுத்துள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என்றார். மேலும், 1347 பயணாளிகளுக்கு ரூ 151 .52 லட்சம் வரை கடனாக கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு பல்வேறு வகையான வகையில் 2000 குழுக்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது வாழ்வாதரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை செயல் படுத்துகிறோம். மேலும் இது ஜாமீன் இல்லாத கடன் சேவையாக இருப்பது குழுவில் உள்ள பெண்களுக்கு சிறப்பான சேவையாகும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், டிஎன்யுஎல்எம் திட்ட அலுவலர் என்.சீனிவாசன்.
மற்றும் சிறப்பு விருந்தினர்களாக SLBC-TN ன் பொது மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மோகன் எம். ஆகியோர் கலந்து கொண்டனர்.