கோவையில் சரக்கு ஆட்டோவில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – டிரைவர் கைது..!

சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். டிரைவர் கைது.

கோவை: பொள்ளாச்சி உணவு பொருள் பதுக்கல் தடுப்பு பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் நேற்று கோவை காந்தி பார்க் – தடாகம்ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 25 கிலோ எடை கொண்ட 30 சாக்கு முட்டைகளில் 750 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.இது தொடர்பாக ஆட்டோ ஓட்டி வந்த பாலக்காட்டைச் சேர்ந்த ஜெபேஸ் ( வயது 28) கைது செய்யப்பட்டார். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.