6ஜி ஆராய்ச்சியில் 100 காப்புரிமைகள்: சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள் ..!

புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், &’6ஜி&’ தொழில்நுட்பத்திற்கான 100 காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தற்போது &’5ஜி&’ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக, &’6ஜி&’ குறித்த ஆராய்ச்சிகளில், உலகம் கவனம் செலுத்த துவங்கி உள்ளது.

இந்த பந்தயத்தில் பின்தங்கிவிடாமல் இருக்கும் வகையில், இந்தியாவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், &’6ஜி&’ தொழில்நுட்பத்திற்கான 100 காப்புரிமைகளைப் பெற்று உள்ளனர்.இது குறித்து அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது: &’எலக்ட்ரானிக்ஸ்&’ என்பது மிகவும் சிக்கலானது. ஆனால், அது அவ்வளவு சிக்கலானதாக இருந்த போதிலும், நமது விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் &’6ஜி&’ சம்பந்தமாக கிட்டத்தட்ட 100 காப்புரிமைகளை பெற்றுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி, &’5ஜி நெட்வொர்க்&’ இணைப்பு வசதியானது 397 நகரங்களில் வழங்கப்பட்டு விட்டது. மார்ச் 31ம் தேதிக்கும் மேலும் 200 நகரங்களில் இணைப்பு விரிவுபடுத்தப்படும்.தற்போது இந்தியா உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையை அடைய ஆயிரக்கணக்கான விஷயங்கள் மாறுதலுக்கு உள்ளாக்கப்பட வேண்டியிருந்தது.

நிர்வாக அமைப்புகள், சரக்கு போக்குவரத்து அமைப்புகள், வங்கி அமைப்புகள் என பலவற்றில் மாற்றங்கள் தேவைப்படுகிறது.இந்த மாற்றத்துக்கான பயணத்தில் அனைவரும் இணைந்து கொள்வதற்கான நேரம் இது. இந்த மாற்றத்தை நாம் ஏற்படுத்தி விட்டோம் என்றால், இந்தியா 30 டிரில்லியன் அதாவது, 2,490 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 99 சதவீத மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் இப்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் 99 சதவீத போன்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.