45வது புத்தகக் கண்காட்சி: பிப்ரவரி 16ந்தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.!!

சென்னை: 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி16ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி, கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, பிப்ரவரி 16 ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 3 வரை 16 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியான காலை 11 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு நுழைவுக்கட்டணம் ரூ.10 என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம், ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 45வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 ஆம் தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என பபாசி அமைப்பினர் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதை ஏற்று, தமிழக அரசு புத்தக கண்காட்சியை தொடங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.