ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை அறிவிப்பு.!!

சென்னை:
ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால், 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மே இறுதிவரை பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. 6 முதல் 9ம் வகுப்பு மே மாதம் 13ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.

தேர்வுகள் முடிந்ததும், ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக, ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.