பசுமை புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி..!

நீலகிரி மாவட்டம்: வேளாண்மைத்துறை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி கூட்டம் உதகை எஸ.ஆர்டி.எஸ். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர், அனிதா ஹரிஹரன் தலைமை தாங்கினார். விழா முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரிராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார்.
தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் நெஸ்ட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான சிவதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அவர் தமது இரங்கல் உரையில் இந்திய மக்களின் உணவு பாதுகாப்பிற்கு அடித்தளமிட்டவர் டாக்டர் சுவாமிநாதன் அவர்கள். 1950 களில் உலகம் முழுவதிலும் பலகோடி மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்க விஞ்ஞானி போர்லாக்சுடன் இணைந்து பசுமை புரட்சியை இந்தியாவில் உருவாக்கினார். அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு நாம்தான் உணவு கொடுக்கிறோம் என்று தற்பெருமை பேசிய காலத்தில் தமது அறிவியல் அறிவால் உணவு உற்பத்தியில் பிற நாடுகளை சார்ந்திருக்காமல் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றிய பெருமை விஞ்ஞானி சுவாமிநாதனையே சேரும் என சிவதாஸ் குறிப்பிட.ட்டார், சிறப்பு கருத்தாளராக கலந்துக் கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவர் கே.ஜே.இராஜூ பேசும் போது விஞ்ஞானி சுவாமி நாதன் குறைந்த காலத்தில் விளையும் 158 வகையான அரிசிகளை கண்டறிந்து உலக மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றிய பெருமை அவருக்கு உண்டு. நவீன அறிவியல் துணையுடன் வருடத்திற்கு மூன்று போக அரிசி உற்பத்திக்கு வழிவகுத்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்றினார். இன்று இந்தியாவின் நூற்று நாற்பது கோடி மக்களின் உணவு தேவை போக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி நாம் செய்வது குறிப்பிடத்தக்கது என்பன போன்ற பலசெய்திகளை இராஜூ கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் மறைந்த விஞ்ஞானிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர், விழா நிறைவாக ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்,.