வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி: வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி

தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளர் கைது

கோவை சித்தாபுதூர் பகுதியில் என்.ஜே பிளேஸ்மெண்ட் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முருகன் என்பவர் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்தார். இதை பார்த்து. சூலூர் அடுத்த முத்து கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த தாரணி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து நார்வே நாட்டில் வேலைக்காக அணுகியுள்ளார் . 6 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறியிருக்கிறார் . பல்வேறு தவணைகளாக வங்கி கணக்கு அனுப்பி வைத்தார். ஆனால் பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் விசா மற்றும் பணி உத்தரவு எதுவும் அவருக்கு வரவில்லை. கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது செய்து சிறையில் அடைத்தனர்.