கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போத்தி பிளக்ஸ் கவர்: சமூக வலைதளங்கள்  விமர்சனம் – வன ஆர்வலர்கள் வேதனை

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியில் கும்கி யானைகளின் மீது செஸ் போர்டு வடிவ போர்வை போல் போத்தி பிளக்ஸ் கவர்.

இயற்கையோடு இணைந்து வாழும் மலை வாழ் மக்கள் தினமான சர்வதேச பழங்குடிகள் தினம் கொண்டாடப்படுகிறது இந்நிலையில் செஸ் ஒலிம்பியர் போட்டி நிறைவு நாள் அன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள வன அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் கவரால் ஆன பிளக்ஸ் கவரை கும்கி யானைகள் மீது போர்வை போல் போர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது யானைகள் தயார் செய்யும் போது பிளாஸ்டிக் பிளக்ஸ் கவர்களையும் அதில் வெளிப்படுகிற வாசனையும் கண்டு இரண்டு கும்பி யானைகள் பயத்தால் மிரண்டு அந்தக் கூட்டத்திலிருந்து வனப் பகுதிக்குள் ஓடியது.

பின்னர் கும்கி யானைகளை பராமரிக்கும் பாகங்கள் யானைகளை சமாதானப்படுத்தி கட்டாயப்படுத்திய நிலையில் அங்கு வைக்கப்பட்டுள்ள சதுரங்க பலகையை சுற்றிவர யானைகளை வனத்துறையினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் டாப்ஸ்லிப் பகுதியை சுற்றி பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகளின் முகம் சுழிப்பை ஏற்படுத்தியது.

மேலும் கும்கி யானைகளை கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி பிளாஸ்டிக் கவர்களை யானைகள் மீது போர்த்தி விளம்பர காட்சி பொருளாக்கி உள்ளனர் என்று வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.