கோவை மத்திய சிறையில் திடீர் சோதனை: கஞ்சா சிக்கியது – கைதிகள் மீது வழக்குபதிவு..!

கோவை மத்திய சிறையில் ஜெய்லராக பணிபுரிந்து வருபவர் மனோ ரஞ்சிதம். இவர் நேற்று சிறை வார்டன்களுடன் மத்திய சிறையில் உள்ள டவர் பிளாக்கில்,36 வது அறையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சிறை கைதிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கிராம் கஞ்சா சிக்கியது . இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்  சிறை கைதிகளான வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அவ்வை நகரை சேர்ந்த ராஜன் (வயது 36) கணபதி ராமகிருஷ்ணாபுரம் சி. எம் நகரை சேர்ந்த செந்தில் (வயது 42) மற்றும் சிறையில் கைதியை பார்க்க வந்த பார்வையாளர் பிரபுராஜ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..