கோவையில் உயர்ரக போதை பொருள் விற்பனை- கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது..!

கோவை – அவினாசி ரோடு நீலாம்பூர் பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் “மெத்தம்பேட்டமின் ” எனும் உயர்ரக போதைப்பொருளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் உயர்ரக போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர்கள் விவரம் வருமாறு:-
வருண் (26),காங்கரஸ் பவன் அருகில், தோட்டடா கண்ணூர்,கேரளா, நந்தகிருஷ்ணா(21), கிழக்கேல் ஹவுஸ், கண்ணுக்கரா, தானா, கண்ணூர், கேரளா – (இவர் பிளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். முகமது அரஷத் (20), மருக்கரா,
விலயூர் பாலக்காடு, கேரளா (இவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்) இவர்களை சோதனை செய்து சுமார் 60 கிராம் உயர்ரக போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப் பொருளின் மதிப்பு ரூபாய் 1,80,000. ஆகும். இவர்கள் மீது சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.