செல்போன் கடையில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை..!

கோவை கணபதி பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 31)அந்த பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடையும், பால் வியாபாரமும் செய்து வருகிறார் .6 -ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .அங்கிருந்த 6 செல்போன் ரூ28ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் .இதுகுறித்து விக்னேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.