கோவை பெட்ரோல் பங்கில் ரூ 7.50 லட்சம் மோசடி- சூப்பர்வைசர் மீது வழக்குபதிவு..!

கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தணிக்கை செய்ய சென்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதாக மேற்பார்வையாளராக பணியாற்றிய பெரிய கடை வீதியைசேர்ந்த சர்புதீன் ( வயது 51) உட்பட 8பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக்கு ஆய்வு செய்யப்பட்டது .இதில் அங்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சர்புதீன் ரூ 7 லட்சத்து 61 ஆயிரத்தி 655 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சர்புதீன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் மேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.