கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு- அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு- அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அச்சம்

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் பழைய கட்டிடத்தின் நடுவில் உள்ள காலி இடத்தில் பாம்பு ஒன்றை கண்டுள்ளார். இதனை அடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர், பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு குப்பைகள் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரமாக தேடியும் பாம்பு தென்படவில்லை. இதனை அடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். பாம்பு பிடிப்படாததால் கட்டிடத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் பாம்பை பார்த்ததாக கூறப்படும் இடத்திற்கு பின்புறம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குப்பைகள் அதிகமாக உள்ள இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது குப்பைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.