சாய்பாபா காலனி பகுதியில் தொடர்ந்து அரங்கேறும் கொள்ளை சம்பவங்கள் – பீதியில் கோவை மக்கள்.!!

கோவை மாநகரம் சாய்பாபா காலனி உட்கோட்டத்தில் திருட்டு, கொள்ளை ,வழிப்பறி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி, 1 வீடு உடைத்து திருட்டு,9 சாதாரண திருட்டு உட்பட 11 திருட்டுக்கள் நடந்துள்ளன.20 21 ஆம் ஆண்டு 6 வழிப்பறி, 3 வீடுகளில் பகல் நேர திருட்டு, 4 வீடுகளில் இரவு நேர திருட்டு. 15 திருட்டு உட்பட 28 திருட்டு ‘வழிப்பறி வழக்குகள் நடந்துள்ளன. 2022ஆண்டு 11 வழிப்பறி வழக்குகளும் 6 வீடுகளில் பகல் நேர திருட்டும், 2 வீடுகளில் இரவு நேர திருட்டும். 43 திருட்டு உட்பட 62 திருட்டுகள் நடந்துள்ளன.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் திருட்டு வழிப்பறியை தடுக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி நடந்து வருகிறது..