தீபாவளி பண்டு ஏலச்சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.36 லட்சத்து 67 ஆயிரம் மோசடி- கணவன், மனைவி கைது..!

சென்னை போரூர் முகலிவாக்கம் மெயின் ரோடு பகுதியில் மட்டன் மற்றும் சிக்கன் கடையை நடத்தி வருபவர் அபிதா பாரூக் .இவர் பொன்னியம்மன் கோயில் தெரு ராதாபாய் நகர் கோவூர் சென்னை என்ற முகவரியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் . வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபாதையில் கறிக்கடை நடத்தி வருவதாகவும் கணவர் பாரூக் மதனந்தபுரம் முகலிவாக்கம் பகுதியில் தனியாக கறிக்கடை நடத்தி வருகிறார் .அப்போது சென்னை போரூர் மதன் நந்தபுரம் சுப்பையா நகர் லட்சுமி அவென்யூ பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்கிற ரூஸ் லீ வேலன் மற்றும் அவனது மனைவி அனிதா ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் என்னை ஏமாற்றும் நோக்கில் ஏல சீட்டு நகை பண்டு மகளிர் குழுக்கள் சீட்டு நடத்தி எங்களைப் போல் பலரிடமும் நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். எங்களுக்கும் மற்றும் பலருக்கும் ரூபாய் 36 லட்சத்து 67 ஆயிரத்து 710 யை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். நாங்கள் குற்றவாளியின் வீட்டை சென்று பார்த்த போது அவர்கள் அந்த வீட்டை விற்றுவிட்டு இரவோடு இரவாக காலி செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரிடம் புகார் செய்தனர். மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பெருமாள் மேற்பார்வையில் காவல் கூடுதல் துணை ஆணையர் ஸ்டீபன் மற்றும் உதவி ஆணையர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அனிதா வயது 41 மற்றும் ரூஸ்லீ வேலன் என்கிற மூர்த்தியை திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் தலை மறைவாக இருந்த குற்றவாளிகளை ஓடிவிடாமல் இருக்க கிடுக்கி பிடி போட்டு கைது செய்தனர்..