திருச்சியில் ரேஷன் கடை பணியாளர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம்…

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் தினேஷ்குமார் மற்றும் தலைவர் ஜி ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினி மஹாலில் ரேஷன் கடை பணியாளர்கள் செயற்குழு கூட்டம். எம் அண்ணாதுரை மாநில தலைமை நிலைய செயலாளர் தலைமையில் மேலும் மாவட்ட நிர்வாகிகள் சி. சுபாஷ் சந்திரபோஸ் டி. கணேஷ் டி.கந்தசாமி பி முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகிக்க கூட்டம் நடைபெற்றது இதில் கூட்டுறவுத் துறையை தனித்துறையின் கீழ் கொண்டு வருவது மற்றும் விடுபட்ட 10% போனஸ் வழங்குவது கோரி அந்தந்த மாவட்டங்களில் கூட்டத்தை நடத்தி வருகிற 05. 01. 2024 ஆர்ப்பாட்டத்தினை மிகவும் சிறப்புடன் நடத்திடவும் அந்தந்த மாவட்டங்களில் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் செய்திட வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதை உடனடியாக கலைந்து சங்க பணியாற்ற வேண்டும், சங்க செயல்களுக்கு புறம்பாக நடப்பதாக அறிந்தால் அவர் சங்கத்தில் எப்பொறுப்பில் இருந்தால் அவரை கேள்வி கேட்காமல் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லாமல் அவர்களை கட்டுப்படுத்தி இல்லாவிட்டால் நேரடியாக தலைவரே நடவடிக்கை எடுப்பார். நான் என்று இருக்காமல் நாம் எல்லோரும் சங்கம் என்று பணியாளர்களுக்காக பாடுபட வேண்டுமாய் நிர்வாகிகள் இடம் மாநில தலைவர் ராஜேந்திரன் உரையாற்றினார். மேலும் மாவட்ட மகளிர் அணி துவக்கம் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய காலண்டர் வழங்குதல் 5 1 2024 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பணியாளர்களை தயார்படுத்துதல் 2023 ஆம் ஆண்டு மீதமுள்ள சந்தா தொகை வரவு செலவு பார்த்தல் திருச்சி மாவட்டத்தில் விற்பனையாளர்கள் நிறைகுறைகளை கேட்டு மாவட்டம் மையத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் துணைத் தலைவர் என் டி ராமசாமி மற்றும் மாநில இணை செயலாளர் டி தங்க பூமி மற்றும் கே பீட்டர் சேகர் சிவா தியாகராஜன் கே ஜி ஆறுமுகம் எம். வேல்முருகன் பி ரத்தினம் மற்றும் மாவட்ட துணை தலைவர்கள் இணை செயலாளர்கள் உரையாற்றினார்கள். நிகழ்வின் முடிவில் மாவட்ட பொருளாளர் வீ. கார்த்திகேயன் நன்றி உரையாற்றினார். ஏராளமான சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.