சாய்பாபா காலனியில் 98 சி.சி.டி.,வி கேமராக்கள் திறப்பு…

கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .மேலும் மாநகர் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், குற்றவாளிகளை போலீசார் எளிதில் கண்டறிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாரதி பூங்கா பகுதியில் 37 கேமராக்கள், ரத்தினபுரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 61 கேமராக்கள் என மொத்தம் 98 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன அவற்றின் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நடந்தது. அந்த அறையை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அவர் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் .இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், கவுன்சிலர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.