தஞ்சை மறியலில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைத்திட கோரிக்கை.!!

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சி கோட்டை ஊராட்சி, தஞ்சாவூர் டு கறம்பக்குடி மெயின் ரோடு, மறியல் பகுதியில் நான்கு முனை சாலை சந்திப்பு உள்ளது .
இந்தசந்திப்பானது 2 வழி சாலை சந்திப்பாகும். கறம்பக்குடி டு தஞ்சாவூர், தஞ்சாவூர் டு கறம்பக்குடிமெயின் ரோடும், மறியல் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தஞ்சைக்கும், கரம்பக்குடிக்கும் இந்தசந்திப்பில் பிரிந்து செல்லும்.
அதே போன்று விளார் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள்,கறம்பக்குடிக்கும் தஞ்சாவூருக்கும் இந்த சந்திப்பில் இருந்து தான் பிரிந்து செல்கிறது.
 இந்த நான்கு முனை சந்திப்பு அருகில் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியும்,மெயின் ரோட்டில் அரசு பள்ளியும் உள்ளது.
 இந்த சாலையில் தினந்தோறும் காலை, மாலையில்  கல்லூரி, பள்ளி நேரங்களில்  ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார், அரசு பேருந்துகள் ஷேர் ஆட்டோ, மற்றும் சரக்கு வாகனங்களும் செல்கின்றன .
காலை மற்றும் மாலையில் பள்ளிகள் கல்லூரிகளில் நேரங்களில் மாணவர்கள் செல்லும்போதும் ,திரும்பும்  நேரங்களில் இந்தசாலை சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும், விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்ற இடமாகவும் உள்ளது.
 இந்த சந்திப்பில் விபத்துக்களை தடுக்க நான்கு வேகத்தடை அமைக்க வேண்டி உள்ளது. ஆனால் வேகத்தடை இல்லாத காரணத்தினாலும், போக்குவரத்தை சரி செய்வதற்கு காவலர்கள் இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை, கடைபிடிக்காமல் கண்ட பக்கமும் திரும்புவதால்  விபத்துக்கள் ஏற்படுகிறது .
நீண்ட காலமாக இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தஞ்சை மாவட்ட தலைவர் சுரேஷ். கூறுகையில் இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் அரசுக்கு தெரியப்படுத்தியும் ,அதிகாரிகள்  கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். தினம்தோறும் இந்த பகுதியில் விபத்துக்கள் நடைப்பெறாத நாட்களே இல்லை என்று கூறலாம் .
வாகன ஓட்டிகள் இந்த இடம் வரும்போது விபத்துக்கள் ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்துடனும்,ஒருவித  பதற்றத்துடன் வருவதாலும் விபத்துக்கள் ஏற்படுகிற சூழல் உள்ளது .
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த நான்கு முனை சாலை சந்திப்பில் பெரிய அசம்பாவிதம் ஏதும் நடந்து அதன் மூலம் உயிர்பலிகள் ஏற்படுவதை தடுத்திட உடனடியாக வேகத்தடை அமைத்திட வேண்டும் .
மாவட்ட நிர்வாகமும் ,அரசு அதிகாரிகளும்,காலதாமதத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தால், அகில இந்திய மறுமலர்ச்சி மக்கள் கழகம் பொதுமக்களுடன் இணைந்து இப்ப பகுதியில் ஆர்ப்பாட்டம் ,மறியல் போன்ற போராட்டங்களை நடத்த நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.
பொதுமக்கள் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவியர்களின், நலனை கருத்தில் கொண்டு, விப த்துக்கள் ஏற்படும் உயிர் சேதத்தை தடுத்திட ட மாவட்ட நிர்வாகம் வேகத்தடை அமைக்குமா?என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்..