ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுமிகள் பள்ளிகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அடிப்படைவாதம் தலைதூக்கி, பெண்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டுள்ளன. பர்தா அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்ற பெண்கள் இப்போது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகள் கல்வி பயில தடை விதித்தனர். இதன்படி மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இருந்தாலும் ஒரு சில பள்ளி நிர்வாகங்கள், மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. ரகசிய இடங்களில் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதைத் தடுக்க தலிபான் வீரர்கள் நாடு முழுவதும் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். பருவ வயது சிறுமிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். சுமார் 30 லட்சம் மாணவிகள் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
தலிபான்களுக்கு சவால் விடும் வகையில் ஆப்கானில் ஹசாரா பழங்குடி மக்கள், பெண் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். அச்சுறுத்துல்களுக்கு அஞ்சாமல் ஹசாரா மக்கள், மகளிர் கல்வி நிறுவனங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஹசாரா மாணவிகள் மோட்டார் சைக்கிள்களில் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.
Leave a Reply