10,11 மற்றும்12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் மே 5 முதல் மே 28 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.
செய்முறை தேர்வுகள்- ஏப்ரல் 25 – மே 2 நடைபெற உள்ளது.
மே 6 முதல் மே 30ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.
மே 9 முதல் மே 31 ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது. செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25 – மே 2 நடைபெற உள்ளது என அறிவித்தார்.
Leave a Reply