கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் கற்பழிப்பு: பக்கத்து வீட்டுக்காரர் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் கற்பழிப்பு: பக்கத்து வீட்டுக்காரர் கைது

கோவை வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  22 வயது இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். இளம் பெண் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் திடீரென இளம் பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து அவரது உறவுக்கார பெண் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம் பெண் அந்தப் பகுதிகளில் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் தேடினார். சிறிது நேரம் கழித்து பல இடங்களில் தேடி வந்த பிறகு இளம் பெண் பக்கத்து வீட்டிற்குள் ஆடைகள் களைந்த நிலையில் நின்று கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  இளம் பெண்னிடம் என்ன நடந்தது என்ன கேட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் வரதராஜ் தன்னை கற்பழித்து விட்டதாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவு பெண் இது குறித்து கோவை அனைத்து மகளிர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜகோபால் என்பவரின் மகன் வரதராஜ் (43) கற்பழித்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.