டாஸ்மார்க் கடை திறப்பதை எதிர்த்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மதுவைக் கொட்டி நூதன ஆர்ப்பாட்டம்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்த ராமநாதன் மற்றும் அந்த ஊர் இளைஞர்கள் மதுவை கொட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமநாதன் கூறுகையில்,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு டவுன் பஸ் ஸ்டாண்ட் , குடிதண்ணீர் பைப், கோயிலுக்கு அருகில் புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டுள்ளது . இங்குதான் இங்கு தினசரி வேலைக்கு செல்லும் பெரியவர்கள் முதல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வரை இந்த கிணத்துக்கடவு டவுன் பஸ் ஸ்டாண்ட்ல் இருந்து பயணம் செய்கிறார்கள் . அது மட்டும் இல்லாமல் இங்கு குடிநீர் பைப் உள்ளது . பகுதியைச் சேர்ந்த பெண்கள் இங்குதான் குடிநீர் தண்ணீர் பிடிக்கிறார்கள் . மட்டுமில்லாமல் அருகில் கோயிலும் உள்ளது.அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை புதிதாக தொடங்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது . அதே போல குடிமகன்களால் பஸ்ஸுக்கு நிற்பவர்களுக்கும் , தண்ணீர் பிடிக்க வரும் பெண்களுக்கும் , மிகப்பெரிய இடையூறுகளும் ஆபத்துகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது . நீதிமன்றம் ஏற்கனவே இப்படிப்பட்ட இடங்களில் டாஸ்மார்க் கடை அமைக்கக் கூடாது என பல வழக்குகளிலே உத்தரவிட்டுள்ளது . ஆகவே கிணத்துக்கடவு டவுன் பஸ் ஸ்டாண்ட் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மார்க் கடையை ( 1880 ) அகற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததாக ராமநாதன் தெரிவித்தார். ,