ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம்… போக்குவரத்துத்துறை அமைச்சராக எஸ்.எஸ். சிவசங்கர் நியமனம்-முதல்வர் அதிரடி உத்தரவு .!!

முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம்.

தமிழகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், சிவசங்கரின் துறைகளை மாற்றி தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதுகளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.