உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீதான படுகொலை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் அதிபரை படுகொலை செய்ய 25 பேர் கொண்ட ரஷ்ய சிறப்புப் படை ரஷ்ய அரசால் அனுப்பப்பட்டது. ஸ்லோவாக்கியா-ஹங்கேரி எல்லையில் நிலைகொண்டிருந்த 25 துருப்புக்கள் அடங்கிய குழுவை தடுத்து வைத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கியேவ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை கொல்ல ரஷ்யா தொடர்ந்து முயன்று வருவதாகவும், இது தொடர்பான பல முயற்சிகளை தனது ராணுவம் முறியடித்துள்ளதாகவும் உக்ரைன் கூறுகிறது.
Leave a Reply