பல்லடம் அருகே சிற்றம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில்இன்று சனி பெயர்ச்சி விழா…

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-உடுமலை ரோட்டில் உள்ள சிற்றம்பலத்தில் கோளாறுபதிநவகிரக கோட்டை உள்ளது. இங்கு சோபகிருது வருட சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா, உலக நலன் கருதி மக்கள் நிறைவாக வாழ 1008 தீர்த்த கலச அபிஷேக பெரு விழா இன்று ( புதன்கிழமை) மாலை 5- 20மணிக்கு நடக்கிறது இதை யடுத்து இன்று காலை 6 மணிக்கு விநாயகர் வேள்வி, 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வி,8 மணிக்கு லட்சார்ச்சனை தொடர்ச்சி, 9 மணிக்கு 108 குண்டங்களில் சனி பகவான் மூலமந்திர வேள்வி, 10 மணிக்கு திரவிய வேள்வி 12 மணிக்கு பூர்ணாகுதி, மாலை 4 மணிக்கு மூன்றாம் காலவேள்வியும், 5 மணிக்கு சனி பகவான் மூல மந்திரம் வேள்வி,திரவிய வேள்வி, 5 -20 மணிக்கு சனி பகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 6 மணிக்கு சனிபகவான் பெரும் திருமஞ்சனம், அபிஷேகம், 68 தீர்த்த கலசஅபிஷேகம் 6 – 30 மணிக்கு பூர்ணாகுதி தீபாரதனை, 7 மணிக்கு சனி பகவான் திருவீதி உலா இரவு 8 மணிக்கு சனி பகவான் அலங்கார தீபாரதனை நடக்கிறது,ஞானகுரு.சாக்த ஸ்ரீ.சிவ லிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்.பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை சித்தம்பலம்.ஞானகுரு நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.