பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.75 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2.25 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1.75 கோடி வீடுகள் மார்ச் 9ஆம் தேதி 2022ஆம் ஆண்டு நிலவரப்படி கட்டி முடிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது அனைத்து வீடற்ற ஏழகளுக்கும், பாழடைந்த வீட்டில் வசிக்கும் குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகளுடன் கூடிய முறையான வீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 2.95 கோடி வீடுகள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது கடந்த 2001-ஆம் ஆண்டு மார்ச்’க்கு பிறகு வரும் 2024’ம் ஆண்டு மார்ச் வரை இந்த திட்டத்தை தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் போது அடித்தளம், அஸ்திவாரம், ஜன்னல், ஓரம், லின்டல், கூரை போன்ற பல்வேறு கட்டட அமைப்புகளை கட்டி பயனாளர்கள் வீடுகளை முடிப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று தவணைகளில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த நிதி உதவி 12 மாத கால இடைவெளியில் கொடுக்கப்படுகிறது.
Leave a Reply