ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு… திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் தர்ணா..!

ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் மாநகராட்சி அதிகாரிகள் தர்ணா.பரபரப்பு

திருப்பூர் மாநகராட்சி நொய்யல் கரையோரம் உள்ள சாயபப்ட்டரை வீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம். ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் தரையில் அமர்ந்து தர்ணா செய்த்வதால் பரபரப்பு. போலீஸ் குவிப்பு

ஆக்கிர மிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதியில் உள்ளவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்தனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தனர் . இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்களை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.