கோவையில் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி: தி.மு.க .வினர் அடியாட்களை கொண்டு மிரட்டல் – பாதிக்கபட்டவர் செல்போன் காட்சிகளுடன் புகார்

கோவையில் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்க முயற்சி: தி.மு.க .வினர் அடியாட்களை கொண்டு மிரட்டல் – பாதிக்கபட்டவர் செல்போன் காட்சிகளுடன் புகார்

கோவை, வடவள்ளி பகுதியில் வசித்து வருபவர் தேவகி. தேவகியின் கணவர் முத்துச்சாமிக்கு அவரது தாயமாமன் பழனியப்பன் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்த பழனியப்பன் மற்றும் கணவர் முத்துச்சாமி இருவரும் வேவ்வேறு காலங்களில் இறந்துவிடவே கணவர் இறந்த பின் கடந்த 4 ஆண்டுகளாக அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் தேவகி. இந்நிலையில் அந்த வீட்டை காலி செய்து அங்கிருந்து கிளம்பும் படி உயிரிழந்த பழனியப்பனின் இரண்டாவது மனைவி பொன்னம்மாள், குண்டர்களையும் அடியாட்களை கொண்டு மிரட்டியதாக தேவகி மற்றும் அவரது உறவினர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக பேசிய தேவகியின் மகள் புனிதா, தனது தாய் தேவகி அந்த வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்த பொன்னமமாள் குண்டர்கள், அடியாட்களை கொண்டு அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் மிரட்டுவதாகவும், ” வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் இந்த இடத்தையும் வீட்டையும் வாங்கிவிட்டதாகவும் கூறி அப்பகுதி தி.மு.க வினருடன் வந்து மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து வடவள்ளி காவல் நிலையத்தில் சென்று புகாரளித்தும் புகாரை வாங்க மறுத்த ஆய்வாளர் இந்த பிரச்சனை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுத்து தங்களை காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.