சைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனங்களை திருடும் ஃபுரபசனல் திருடர்கள்..

சைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனங்களை திருடும் ஃபுரபசனல் திருடர்கள்..

வாகன திருட்டு பீதியில் உறங்காமல் தவிக்கும் வாகன உரிமையாளர்கள்..

நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல்களின் கொட்டங்களை அடக்குமா – இரவு நேர காவல்துறையின் ரோந்து பணி

கோவையில் நள்ளிரவில் வாகனம் திருடும் திருடர்கள் அதிகரித்துள்ளனர்.

காவல்துறையினருக்கு வருகின்ற புகாரில் வாகன திருட்டு புகார் இல்லாத நாளே இல்லை. திருட பயிற்ச்சி எடுத்துக்கொண்டவர்கள் போல நோட்டமிட்டு வண்டியை லாவகமாக திருடி செல்கின்றனர். குழுவாக வந்து வண்டி சைட் லாக்கை உடைத்து மற்றொரு திருட்டு நண்பரின் உதவியுடன் டோ செய்து லாவகமாக திருடி செல்கின்றனர். வாசலில் நிறுத்தப்பட்டிருக்கின்ற வாகனத்தை சைட் லாக்கை உடைத்து வண்டியை சாவி இன்றி வையர் மூலமாக இயக்கி அசால்ட்டாக திருடி செல்கின்றனர். கள்ள சாவியிலும் வாகனத்தை திருட்டு கும்பல் திருடி செல்கின்றனர்.

அதனடிப்படையில் கோயமுத்தூரில் இந்த மாதம் மட்டும் மர்ம நபர்களின் கைவரிசையால் 100க்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் திருடப்பட்டதாக புகார் தரப்பினர் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் ஃபுரபசனல் திருடர்கள் ஊடுருவி விட்டனரா என்ற கேள்வி எழுகின்ற வகையில் வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது வாகன உரிமையாளர்களை பீதியில் ஆழ்த்தியிருக்கின்றன.

எனவே இரவு நேரங்களில் போலிஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டிய தேவை ஏற்ப்பட்டிருக்கின்றன. உறக்கத்தை கெடுத்த இந்த ஃபுரபசனல் திருடர்களின் கொட்டத்தை அடக்க உறங்காமல் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்க்கொள்வார்களா என்பது வாகன உரிமையாளர்களின் கேள்வியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.