கல்லூரி மாணவரிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து… நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரி உத்தரவு..!

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சோமனூரில் இருந்து சித்ரா பேருந்து நிலையம் வந்த தனியார் பேருந்தில் ஏறி ரூபாய் 10 கொடுத்து அரசு மருத்துவக் கல்லூரி நிறுத்தத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்தினர் ரூபாய் 7 கான டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி பணம் கொடுக்கவில்லை. மேலும் ரூபாய் ஐந்துக்கு பதிலாக ஏழு ரூபாய்க்கு டிக்கெட் வழங்கிய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையாளர் செந்தில்நாதனிடம் புகார் செய்தார். அதன் பெயரில் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க இணை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.