வரும் 27ம் தேதி நடக்கும் சின்ஷோ இறுதிச்சடங்கில் பிரதமர் மோடி பங்கேற்பு..!

புதுடெல்லி: ஜப்பானில் கடந்த 2006 முதல் 2007 வரையும், பின்னர் 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் பிரதமராக இருந்தவர் சின்ஷோ அபே (67).

இவர், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கு நடந்த தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஜூலை 8ம் தேதி நாரா ரயில் நிலையம் அருகே பிரசாரம் செய்தபோது, ஜப்பான் கடற்படை முன்னாள் வீரர் டெட்சுயா யமகாமி (41) என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், சின்ஷோவின் இறுதிச் சடங்கு தலைநகர் டோக்கியோவில் வரும் 27ம் தேதி அரசு மரியாதையுடன் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், வரும் 27ம் தேதி நடக்கும் சின்ஷோவின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.