கோவை : மேட்டுப்பாளையம்- சக்தி ரோட்டில் உள்ள ரங்கம்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஈரோடுவில்லை கோட்டையைச் சேர்ந்த அருள்சாமி (வயது 85 )அதே இடத்தில் இறந்தார் .நிர்மல் தெரசா மேரி (வயது 52) மை ஸ்டிகா (வயது 22) மரிய புஷ்பம் ( வயது 60) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்..இது தொடர்பாக சிறுமுகை போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரனை நடத்தினார்கள். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த சேலம் மேட்டூரை சேர்ந்த டிரைவர் அஸ்வின் ( ஜேம்ஸ் 25) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply