காங்கிரஸ் கட்சி ஒரு துருப்பிடித்த இரும்பு – பிரதமர் மோடி கடும் தாக்கு.!

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது மாநிலத்திற்கு பெரிய இழப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜன சங்கத்தின் இணை நிறுவனர் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளிலும், மாநிலம் முழுவதும் பரவிய பாஜகவின் ‘ஜன் ஆசீர்வாத் யாத்ரா’வின் முறையான உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் ‘கார்யகர்த்தா மகாகும்பம்’ இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போபாலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியது,

மாநிலத்தில் பாஜக தொண்டர்களிடம் உற்சாகம் காண முடிகிறது. கடந்த 20 ஆண்டுகளால் ஆட்சிசெய்து வரும் பாஜக மாநிலத்தை உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

மோடி என்றால் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் என்று கூறிய மோடி காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது மகளிர் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை. கட்டாயத்தின் காரணமாகவே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் ஆதரித்தது.

ஊழல் நிறைந்த குடும்ப கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பளித்தால் அது மாநிலத்திற்கு பெரும் இழப்பாகும். துருப்பிடித்த இருப்பைப் போன்றது காங்கிரஸ் அது மழையில் வைத்தால் துருப்பிடித்துவிடும் என தாக்கியுள்ளார்.

மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. வளர்ந்த இந்தியாவுக்கு, மத்தியப் பிரதேசமும் சேர்ந்து வளர்ச்சியடை வேண்டும் என்பதே பாஜகவின் முக்கிய நோக்கமாகும்.

நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் 13.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் பேசினார்.