மாசு அடைந்த நொய்யல் ஆறு: நடவடிக்கை எடுக்கப்படுமா ? – பொதுமக்கள்

மாசு அடைந்த நொய்யல் ஆறு: நடவடிக்கை எடுக்கப்படுமா ? – பொதுமக்கள்

கோவைக்கு மேற்கு தொடர்ச்சி சிறுவாணி மலைப் பகுதியின் பல்வேறு சிறு ஓடைகள் ஒன்று சேர்ந்து பெருக்கெடுத்து நொய்யல் ஆறாக பாய்கிறது. பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. மூன்று மாவட்டங்கள் வழியாக 180 கிலோ மீட்டர் தூரம் எந்த தடையும் இன்றி ஓடிக் கொண்டு இருந்த நொய்யல் தற்போது

பல்வேறு விதமான ஆக்கிரமிப்புகளால் கோவையின் எல்லையை கடக்கவே சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறது நொய்யல் ஆறு. அந்த நொய்யல் ஆறானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்ட பாய்ந்து கொண்டு இருந்த நொய்யல் ஆறு தற்போது மாசடைந்து காணப்படுகிறது.

கோயம்புத்தூர் நகரைக் கடக்கும் போது நகரின் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலக்கின்றன. மேலும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளின் இருந்து கழிவுநீர்கள், கழிவு பொருட்கள் நொய்யல் ஆற்றில் கலப்பதால் தொடர்ந்து தூய்மைப்படுத்தி, தூர்வாரப்பட்டாலும் மீண்டும் மாசுபடுகிறது. இதனால் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலக்காமல் மாசுபடாமல் இருக்க உடனடியாக மாநகராட்சி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.